ஐரோப்பிய ஒன்றியம் ரூ.65 லட்சம் கோடி நிவாரணம் அறிவிக்க ஜெர்மன் கோரிக்கை

0 294

கொரோனாவால் ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சியை சரி செய்ய, சுமார் 65 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான நிதியுதவித் திட்டத்தை அறிவிக்க வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியத்தை, ஜெர்மன் பிரதமர் ஏஞ்சலா மெர்கல் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதற்கான ஒப்பந்தத்தை கோடை காலம் துவங்குவதற்கு முன்னர் உறுப்பு நாடுகளுக்கு இடையே ஏற்படுத்த வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த தொகையில் சுமார் 43 லட்சம் கோடி ரூபாய் மானிய உதவியாகவும், 22 லட்சம் கோடி ரூபாயை கடனாகவும் வழங்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

உறுப்பு நாடுகள் சந்தித்துள்ள பொருளாதார நலிவை சரி செய்ய நிதித்திட்டத்தை அறிவிக்கலாம் என ஐரோப்பிய கமிஷன் தலைவர் உர்சுலா வோன்டைர் லியென் (Ursula von der Leyen) தெரிவித்துள்ளார். அதே நேரம் இந்த திட்டத்திற்கு ஆஸ்திரியாவும், நெதர்லாந்தும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments