கடன் வாங்கியோரில் 90 சதவீதம் பேர் தவணை செலுத்துவதைத் தள்ளி வைக்கவில்லை-SBI விளக்கம்

0 1782

கடன் வாங்கியவர்களில் 90 விழுக்காட்டினர் தவணைகளைத் திருப்பிச் செலுத்துவதைத் தள்ளி வைக்கவில்லை என உச்சநீதிமன்றத்தில் பாரத ஸ்டேட் வங்கி தெரிவித்துள்ளது.

வங்கிகளில் பெற்ற கடன்கள், கடன் தவணைகள் திருப்பிச் செலுத்துவதை ஆகஸ்டு 31ஆம் தேதி வரை தள்ளி வைக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

தள்ளி வைக்கும் காலத்துக்கு வட்டி கணக்கிட்டு முதலுடன் சேர்க்கப்படும் என வங்கிகள் அறிவித்துள்ளன. இந்நிலையில் தள்ளி வைக்கும் காலத்துக்கு வட்டியைத் தள்ளுபடி செய்யக் கோரிக் கஜேந்திர சர்மா என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, பாரத ஸ்டேட் வங்கி சார்பில் ஆஜரான முகுல் ரோகத்கி, கடன் வாங்கியோரில் 90 விழுக்காட்டினர் தவணைகளைத் திருப்பிச் செலுத்துவதைத் தள்ளி வைக்காமல், உரிய காலத்தில் செலுத்தியதாகத் தெரிவித்தார்.

இதையடுத்துக் கடன் தள்ளி வைப்புக் காலத்துக்கு வட்டிக்கு வட்டி பெறுவதைத் தவிர்ப்பது குறித்து நிதியமைச்சகம், ரிசர்வ் வங்கி, வங்கிகள் ஆகியன பரிசீலிக்க வேண்டும் என அறிவுறுத்திய நீதிபதிகள், ஆகஸ்டு முதல் வாரத்துக்கு வழக்கைத் தள்ளி வைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments