சீனாவின் திட்டத்தை முறியடித்து வீர மரணம் அடைந்த இந்திய வீரர்கள்..!

0 6994

லடாக் கட்டுப்பாட்டு எல்லையில் இந்திய பகுதிக்குள் சீன ராணுவம் அமைக்க முயன்ற கண்காணிப்பு கோபுர பணிகளை தடுக்கும் போது  ஏற்பட்ட மோதல் மற்றும் அதனால் அங்கு ஏற்பட்ட நிலச்சரிவு போன்ற காரணங்களால் தான் நமது வீரர்கள் 20 பேர் வீரமரணத்தை தழுவினர் என்ற தகவல் கிடைத்துள்ளது.

கட்டுப்பாட்டு எல்லையில் உள்ள கால்வான் பள்ளத்தாக்கில் இந்திய துருப்புக்களின் நடமாட்டம் மற்றும் ரோந்துப் பகுதிகளை கண்காணிப்பதுடன், அந்தப்பகுதியை தனது கட்டுப்பாட்டில் வைக்கும் நோக்கத்தோடு, பாயின்ட் 14 என்ற இடத்தில் சீன ராணுவத்தினர் அத்துமீறி கண்காணிப்பு கோபுரம் அமைக்க முயன்றதாக கூறப்படுகிறது.

அந்த கண்காணிப்பு கோபுரம் வாயிலாக காரகோரம் வரையுள்ள இந்திய துருப்புக்களின் நடமாட்டத்தை கண்காணிப்பதே சீன ராணுவத்தின் திட்டம். அதே போன்று அந்த கோபுரம் மூலம், தர்புக்-ஷியோக்-தவுலத் பேக் ஓல்டி எனப்படும் டிபிஓ (DBO) சாலையில் இந்திய ராணுவ வாகனங்களின் போக்குவரத்தை தடுக்கவும் சீன ராணுவம் திட்டமிட்டதாக கூறப்படுகிறது.

இதை தடுக்க கர்னல் சந்தோஷ் பாபு தலைமையிலான படைப்  பிரிவு முயன்றது. அப்போது அங்கு சீனா ஏராளமான துருப்புக்களை குவித்ததை அடுத்து இருதரப்பும் கற்கள் மற்றும் கட்டைகளால் பரஸ்பரம் தாக்குதலில் ஈடுபட்டனர். அத்துடன் 600 க்கும் மேற்பட்ட துருப்புக்கள் நின்ற இடத்தில் நிலச்சரிவு ஏற்பட்டு.

இருதரப்பிலும் பலர் கால்வான் நதியில் விழுந்தனர். கால்வான் நதியில் ஓடிய ஐஸ் போன்ற நீர் மற்றும் அப்பகுதியில் நிலவிய உறையவைக்கும் குளிர் உள்ளிட்ட காரணங்களால், 16000 அடி உயரமுள்ள கால்வான் பள்ளத்தாக்கில், ஒதுங்க வழியின்றி உடலை உறையவைக்கும் ஈர உடைகளுடன், எல்லையை காக்கும் பணியில் நமது வீரர்கள் வீர மரணத்தை தழுவினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments