இந்திய வீரர்களைத் தாக்க உருவாக்கப்பட்ட முள் நிறைந்த கம்பிகள்! சீனா முன்கூட்டியே திட்டமிட்டது அம்பலம்

0 74013
இந்திய வீர்ர்களைத் தாக்க பயன்பட்ட கம்பிகள்

லடாக் எல்லையில் இந்திய - சீன வீரர்கள் மோதலில் 20 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர். சீனத் தரப்பில் ஏற்பட்டுள்ள உயிரிழப்பு குறித்து தகவல் இல்லை. சீன ராணுவ வீரர்கள் திட்டமிட்டு இந்த தாக்குதலை நடத்தியிருப்பதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், சீன வெளியுறவுத்துறையிடத்தில் குற்றம் சாட்டியிருக்கிறார். இந்த தாக்குதலின் போது துப்பாக்கி பயன்படுத்தப்படவில்லை. கைலப்பில்தான் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. ஏனென்றால், இரு நாட்டு எல்லையையொட்டிய 2 கி.மீ சுற்றளவுக்குள் துப்பாக்கியை பயன்படுத்தக் கூடாது என்கிற விதி வரையறுக்கப்பட்டுள்ளது

இதனால், சீன ராணுவத்தினர் முன்கூட்டியே முனை போன்ற கூரான இரும்புக்கம்பியை தங்களுடன் எடுத்து வந்துள்ளனர். இது போன்ற கம்பியை வைத்து சீன வீரர்கள் தாக்கியதால்தான் இந்திய தரப்பில் அதிக உயிரிழப்பு ஏற்பட்டதாக தெரிகிறது. இதே போன்ற கம்பியைத்தான் கடந்த மே 18 , 19- ந் தேதிகளில் சீன ராணுவம் பயன்படுத்தியதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கல்வானில் இந்திய வீரர்களின் உடல்களும் சீன வீரர்களால் சிதைக்கப்படுள்ளதும் இந்திய ராணுவத்தின் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

சீன ராணுவத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ தகவல்கள் இல்லை. இது குறித்து சௌத் சைனா மார்னிங் போஸ்ட் வெளியிட்டுள்ள செய்தியில், 'சீன விடுதலை ராணுவம் குறித்த தகவல்கள் மிகவும் உணர்வுப்பூர்மானவை. சீனாவின் மத்திய ராணுவ கமிஷனின் தலைவராகவும் இருக்கும் சீன அதிபர் ஸீ ஜின்பிங் ஒப்புதலுக்கு பிறகே சீன ராணுவத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்த தகவல்கள் வெளியிடப்படும் '' என்று சொல்லப்பட்டுள்ளது.

இதற்கிடையே , சீன ராணுவத்தின் மேற்கு பிரிவு செய்தி தொடர்பாளர் கர்னல் ஷாங் சூய்லி கூறுகையில், '' கல்வான் பள்ளத்தாக்கில் இருதரப்பிலும் உயிரிழப்பு ஏற்பட்டது உண்மைதான். ஆனால், சீன ராணுவ உயிரிழப்பு குறித்து விரிவாக எதுவும் பேச முடியாது ''என்று கூறியுள்ளார்.

இதனால், சீன தரப்பிலும் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments