ஊரடங்கு அமலாகும் பகுதியிலுள்ள அம்மா உணவகங்களில் மீண்டும் விலையில்லா உணவு

0 1798

முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் சென்னை உள்ளிட்ட பகுதியிலுள்ள அம்மா உணவகங்களில் மீண்டும் விலையில்லாமல் உணவு வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட பின் ஏழை எளிய மக்களின் நலன் கருதி, அம்மா உணவகங்களில் கடந்த மாதம் 31ம் தேதி வரை விலையில்லாமல் உணவு வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சென்னை உள்ளிட்ட பகுதிகளில் நள்ளிரவு முதல் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதால், அங்கு செயல்படும் அம்மா உணவகங்களிலும் விலையில்லாமல் உணவு வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் முதியோர், நோயுற்றோர் மற்றும் ஆதரவற்றோர் நலன் கருதி சமுதாய உணவுக்கூடங்கள் மூலம் சமையல் செய்து வீடு தேடி சென்று உணவு வழங்கும் திட்டத்தை மேலும் வலுப்படுத்தவும் உத்தரவிட்டுள்ளார். இந்த நடைமுறை 19ம் தேதி முதல்
30ம் தேதி வரை செயல்பாட்டில் இருக்கும் எனவும் முதலமைச்சர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments