ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதி ஒருவன் சுட்டுக் கொலை

0 695

ஜம்மு காஷ்மீரில் நடைபெற்று வரும் துப்பாக்கிச் சண்டையில் பயங்கரவாதி ஒருவன் சுட்டுக் கொல்லப்பட்டான்.

கடந்த சில நாள்களாக காஷ்மீரில் பதுங்கியுள்ள பயங்கரவாதிகளை தேடிபிடித்து பாதுகாப்புப் படையினர் வேட்டையாடி வருகின்றனர். அதன்படி,அவந்திபோராவில் உள்ள பாம்போர் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின்பேரில் பாதுகாப்புப் படையினர் இன்று காலை சுற்றி வளைத்தனர்.

இதையடுத்து இருதரப்புக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை மூண்டது. இந்த சண்டையில் பயங்கரவாதி ஒருவன் சுட்டுக் கொல்லப்பட்டான். தொடர்ந்து இருதரப்புக்கும் அங்கு துப்பாக்கிச் சண்டை நடைபெறுகிறது.

துப்பாக்கிச் சண்டை நடைபெறும் பகுதியிலிருந்து பயங்கரவாதிகள் தப்பியோடிவிடாதபடி பாதுகாப்புப் படையினர் சுற்றி வளைத்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments