கொரோனாவிலிருந்து குணமாவோர் விகிதம் 52.95 சதவீதமாக அதிகரிப்பு

0 620

இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமாவோரின் விகிதம் 52 புள்ளி 95 சதவீதமாக அதிகரித்திருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

நாட்டில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 3 லட்சத்து 66 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இதில் 1 லட்சத்து 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட நிலையில், 1 லட்சத்து 94 ஆயிரத்துக்கும் அதிகமானோர் சிகிச்சையில் குணமாகியுள்ளனர்.

இதுதவிர்த்து 12 ஆயிரத்து 237 பேர் இதுவரை பலியாகியுள்ளனர். இந்த புள்ளி விவரங்களை சுட்டிக்காட்டி, மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பில், நாட்டில் கொரோனாவில் இருந்து குணமாவோரின்  விகிதம் 52 புள்ளி 95 சதவீதமாக அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் கொரோனாவில் இருந்து மீண்டோர், உயிரிழந்தோர் விகிதம் 94 புள்ளி பூஜ்யம் 7 சதவீதம்  மற்றும் 5 புள்ளி 93 சதவீதம் என பதிவாகி இருப்பதாகவும் மத்திய அரசால் கூறப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments