கல்வான் பள்ளத்தாக்கு தங்கள் கட்டுப்பாட்டில் இருப்பதாக சீனா அறிவிப்பு

0 6481

இந்திய சீன எல்லையில் உள்ள சர்ச்சைக்குரிய கல்வான் பள்ளத்தாக்கு பகுதி தங்கள் கட்டுப்பாட்டில் உள்ளதாக சீனா அறிவித்துள்ளது.

இந்தியாவுடன் ராணுவ மோதலில் ஈடுபட விருப்பமில்லை என்றும் கல்லான் பகுதி தங்களுக்கு சொந்தமானது என்றும் சீனா தெரிவித்துள்ளது. ஜூன் 15ம் தேதி நிகழ்ந்த உயிர்ச்சேதங்களுக்கு இந்தியா எல்லையில் அத்துமீறியதே காரணம் என்றும் சீனா பழிசுமத்தியுள்ளது.

கல்வான் பள்ளத்தாக்கு சீனாவின் இறையாண்மைக்குட்பட்டது என்று அந்நாட்டு செய்தித் தொடர்பாளர் ஒருவர் அறிவித்துள்ளார்.இந்திய அதிகாரிகளைப் பொருத்தவரை இத்தனை ஆண்டுகளாக அந்தப் பகுதி இந்தியாவுக்கு சொந்தமாக இருந்தது என்றும் இப்போது பகிரங்கமாக சீனா உரிமை கோருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவாத்சவா சீனாவின் உரிமை கோருதல் மிகைப்படுத்தப்பட்டது என்றும் ஏற்றுக் கொள்ள முடியாததும் ஆகும் என்று தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments