தனிநபர் இடைவெளியை மறந்த பொதுமக்கள்

0 2435

சென்னை பாரிமுனையில் வீட்டு உபயோகப் பொருட்களை வாங்கவும் பழுது நீக்கவும் தனிநபர் இடைவெளியின்றி மக்கள் கூட்டம், கூட்டமாக குவிந்தனர்.

கொரோனா பரவலை தடுக்க சென்னையில் 19ம் தேதி முதல் முழு ஊரடங்கு அமலாகிறது. இந்நிலையில்,  சென்னை பாரிமுனையில் உள்ள நைனியப்பன் நாயக்கன் தெரு, ரட்டன் பஜார், மாலை பஜார், உள்ளிட்ட இடங்களில் வீட்டு உபயோக பொருட்களை வாங்கவும், மின்சாதன பொருட்கள் மற்றும் வீட்டு உயபோக பொருட்களை பழுது நீக்கவும் மக்கள் அதிக அளவில் குவிந்தனர்.

கடைகளில் கூட்டம் அதிகரித்த போதும், தனி நபர் இடைவெளியை மறந்து பொருட்களை வாங்குவதிலும்,வியாபாரிகள் பொருட்களை விற்பனை செய்வதிலும் ஆர்வம் காட்டினர்.மேலும்,கடை வீதிக்கு வந்தவர்கள் வாகனங்களை சாலையேரமாக  நிறுத்தி சென்றதால் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments