குணமடைவோரின் எண்ணிக்கை அதிகரிப்பதால் பீதி அடைய தேவையில்லை-பிரதமர் மோடி

0 2615

கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மக்கள் பீதி அடைய தேவையில்லை என்று பிரதமர் நரேந்திரமோடி கேட்டுக்கொண்டுள்ளார்.

நாட்டில் 85 சதவீத கொரோனா பாதிப்பை கொண்டுள்ள தமிழ்நாடு, மகாராஷ்டிரா, குஜராத் உள்ளிட்ட 14 மாநில முதலமைச்சர்கள் மற்றும் ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநர் ஆகியோருடன் பிரதமர் மோடி காணொலி காட்சி முறையில் நோய் தடுப்பு பணிகள் பற்றி ஆலோசனை நடத்தினார்.

அப்போது பேசிய பிரதமர், நாட்டில் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுபவர்களை விட, கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாக கூறினார். ஒவ்வொரு இந்தியனின் உயிரையும் வைரஸ் தொற்றில் இருந்து காக்க இரவும், பகலும் பாடுபட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

மாநிலங்களில் தற்போதுள்ள சூழலை முதலமைச்சர்கள் பிரதமரிடம் எடுத்துரைத்தனர். சவாலை எதிர்கொள்ள சுகாதார உள்கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும் என்றும் பிரதமரிடம் வேண்டுகோள் விடுத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments