இந்திய-சீன எல்லை விவகாரம்:வரும் 19ஆம் தேதி அனைத்து கட்சி கூட்டத்துக்கு பிரதமர் மோடி அழைப்பு

0 2432

சீன -இந்திய எல்லை விவகாரம் குறித்து ஆலோசனை நடத்துவதற்காக வருகிற வெள்ளிக்கிழமையன்று அனைத்து கட்சி கூட்டத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

இதுகுறித்து ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் அலுவலகம் வெளியிட்ட பதிவில், வரும் 19ஆம் தேதி மாலை 5 மணிக்கு அனைத்து கட்சி கூட்டத்தை பிரதமர் கூட்டியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இக்கூட்டத்தில் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும் காணொலி மூலம் பங்கேற்பார்கள் எனவும் அந்தப் பதிவில் பிரதமர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments