தமிழகத்தில் ஊரடங்கை தள்ளுபடி செய்யக்கோரும் மனு தள்ளுபடி

0 1557

தமிழகத்தில் ஊரடங்கை ரத்து செய்யக் கோரி தொடரப்பட்ட மனுவை தள்ளுபடி செய்த சென்னை உயர் நீதிமன்றம், நீதிமன்ற நேரத்தை வீணடித்ததற்காக மனுதாரருக்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டது.

தமிழகத்தில் அமலில் உள்ள ஊரடங்கை ரத்து செய்யக்கோரி, இமானுவேல் என்பவர் தாக்கல் செய்த மனு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில், பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் மாநில அளவில் ஒரு திட்டமும், மாவட்ட அளவில் இன்னொரு திட்டமும் இருக்க வேண்டும் என்றும், இதற்காக தனித்தனியாக குழுக்கள் அமைக்கப்பட வேண்டும் என்றும், ஆனால் அதுபோல் எந்த ஒரு திட்டமும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

இதற்கு அரசு தரப்பில், ஏற்கனவே இதுபோல் தொடரப்பட்ட வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளதால், இதையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. இதைக்கேட்ட உயர்நீதிமன்றம், மனுவை தள்ளுபடி செய்து மனுதாரருக்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments