சென்னை மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள் மேலும் 29 பேர் உயிரிழப்பு

0 3925

சென்னையின் பல்வேறு மருத்துவமனைகளில் கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த மேலும் 29 பேர் உயிரிழந்தனர்.

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கொரானாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் ஆண்கள் 10 பேர், பெண்கள் 2 பேர் என மொத்தம் 12 பேர் உயிரிழந்தனர்.

சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்குச் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 6 பேர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்தனர். சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் கொரோனாவுக்குச் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 9 பேர் உயிரிழந்தனர்.

வடபழனி தனியார் மருத்துவமனையில் கொரோனாவுக்குச் சிகிச்சை பெற்று வந்த ஆழ்வார் திருநகரைச் சேர்ந்த 72  வயது முதியவர் உயிரிழந்தார்.

ஆயிரம்விளக்கு தனியார் மருத்துவமனையில் கொரோனாவுக்குச் சிகிச்சை பெற்று வந்த தியாகராய நகரைச் சேர்ந்த 53 வயது ஆண்  உயிரிழந்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments