நீண்ட நாள் நோய் உள்ளவர்களுக்கு கொரோனா இறப்பு ஆபத்து அதிகம் - அமெரிக்கா ஆய்வு

0 3973

நீரிழிவு, ரத்தக்கொதிப்பு உள்ளிட்ட நீண்டநாள் நோய்களால் அவதிப்படுவோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டால், இறந்து போவதற்கான வாய்ப்பு 12 மடங்கு அதிகம் என அமெரிக்காவில் நடந்த ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இவர்களுக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டால், மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டே ஆக வேண்டும் என்ற நிலைமை 6 மடங்கு அதிகம் எனவும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

அமெரிக்காவின் நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அமைப்பு இந்த ஆய்வை நடத்தியது. இந்தியாவில், கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களில் 78 சதவிகிதம் பேருக்கு இது போன்ற நோய்கள் இருக்கின்றன என்று  ஏப்ரல் 30 வரையிலான தொற்று விவரங்களின் அடிப்படையில் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ரத்தக்கொதிப்பு, சிறுநீரக நோய், நீண்டநாள் சுவாச நோய், நீரிழிவு ஆகியவற்றில் ஏதாவது இரண்டு பாதிப்பு உள்ளவர்கள், கொரோனாவால் உயிரிழக்கும் ஆபத்து ஆதிகம் என கிளினிகல் முடிவுகள் தெரிவிப்பதாக டெல்லி எய்ம்ஸ் இயக்குநர் ரந்தீப் குலேரியாவும் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments