ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தற்காலிக உறுப்பினர் தேர்தலில் ஆசிய-பசிபிக் குழுமத்தின் ஆதரவுடன் போட்டியிடும் இந்தியா

0 814

இன்று நடைபெற உள்ள ஐ.நா பாதுகாப்புக் கவுன்சிலின் தற்காலிக உறுப்பு நாடு பதவிக்கான தேர்தலில், வெற்றி பெறும் முனைப்பில் இந்தியா உள்ளது.

193 நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட ஐ.நா சபையின் முக்கிய அங்கமான பாதுகப்பு கவுன்சிலிற்கு, ஒவ்வொரு 2 ஆண்டுகளுக்கும் 5 தற்காலிக உறுப்பினர்களை ஐ.நா.சபை தேர்ந்தெடுத்து அனுப்புகிறது.

இந்நிலையில், 2021-2022ம் ஆண்டிற்கான 5 தற்காலிக உறுப்பினர்களுக்கான தேர்தலில், ஆசிய-பசிபிக் குழுமத்தை சேர்ந்த 55 நாடுகளின் ஆதரவோடு இந்தியா போட்டியிடுகிறது.

அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளின் ஆதரவு இருப்பதால், வெற்றி பெறுவதற்கான உறுப்பு நாடுகளின் மூன்றில் ஒரு பங்கு ஆதரவு இந்தியாவிற்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிரது.

அதேசமயம், மேற்கு ஐரோப்பிய நாடுகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள இரண்டு இடங்களுக்காக கனடா, நார்வே, அயர்லாந்து இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments