பொய்யான காரணம் கூறி இ.பாஸ் பெற்றதாக கோவில்பட்டியில் பள்ளி தலைமை ஆசிரியர் கைது

0 24800

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் பள்ளி தலைமை ஆசிரியர் ஒருவர் பொய் காரணம்  கூறி இ.பாஸ் பெற்று சென்னை சென்று வந்த நிலையில் கைது செய்யப்பட்டார்.

கோவில்பட்டி ராஜீவ்நகர் பகுதியை சேர்ந்த அமுல்ராஜ் என்பவர் வீரபாண்டியபுரத்தில் உள்ள தமிழ்பாப்திஸ்து பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

இவர் மருத்துவ பரிசோதனை என்று கூறி இ.பாஸ் பெற்று சென்னை மற்றும் கோவில்பட்டி பகுதிக்கு சிலரை காரில் அழைத்துள்ளார். இந்நிலையில் அமுல்ராஜ் பொய்யான காரணங்களை கூறி இ.பாஸ் பெற்றதாக பாண்டவர்மங்கலம் கிராம நிர்வாக அதிகாரி சுப்புராஜ் போலீசில் புகார் கொடுத்தார்.

அதன் பேரில் வழக்கு பதிவு செய்த மேற்கு காவல் நிலைய போலீசார் அமுல்ராஜை  கைது செய்து சிறப்பு முகாமில் தனிமைப்படுத்தியுள்ளனர். மேலும் அவரது காரும் பறிமுதல் செய்யப்பட்டது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments