பிரதமர் மோடி கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுடன் தொலைபேசியில் பேச்சு

0 1241

பிரதமர் நரேந்திர மோடியும் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவும் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள், இருநாடுகளின் ஒத்துழைப்பு ஆகியவை குறித்துப் பேசியுள்ளனர்.

பிரதமர் நரேந்திர மோடி, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுடன் செவ்வாயன்று தொலைபேசியில் பேசினார். அப்போது கொரோனா பரவலைத் தடுக்க இரு நாடுகளிலும் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் பற்றி இருவரும் பகிர்ந்துகொண்டனர்.

கொரோனா சிக்கலை எதிர்கொள்ள உலக அளவில் கூட்டாகச் செயல்படுவதற்கான வாய்ப்புக்கள் பற்றி இருவரும் பேசினர். உலக நலவாழ்வு நிறுவனம் உள்ளிட்ட அமைப்புகளை வலுப்படுத்துவதன் தேவையை இருவரும் வலியுறுத்தியதுடன், நலவாழ்வு, சமூக, பொருளாதார, அரசியல் விவகாரங்களில் இணைந்து செயல்பட ஒப்புக்கொண்டனர்.

கனடாவில் உள்ள இந்தியர்களுக்குத் தேவையான உதவிகள் செய்ததற்கும், அவர்கள் நாடு திரும்ப வசதிகள் செய்ததற்கும் பிரதமர் மோடி நன்றி தெரிவித்தார். அதேபோல் இந்தியாவில் இருந்து கனடா குடிமக்களைத் திருப்பி அனுப்பி வைத்ததற்கு ஜஸ்டின் ட்ரூடோ நன்றி தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments