ரேபிட் டெஸ்ட் கிட் இறக்குமதி - விளக்கம்..!

0 1256

கொரோனா வைரஸ் பரிசோதனைக்கு பயன்படும் சீன நிறுவனத்தின் ரேபிட் டெஸ்ட் கருவிகள் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் பரிசோதனைக்கு பிறகே இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டதாக மத்திய அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

புனே ஆராய்ச்சி நிலையத்தால் அங்கீகரிக்கப்படும் தரமான பரிசோதனை கருவிகளை மட்டுமே பயன்படுத்த உத்தரவிடக்கோரிய வழக்கில் மத்திய சுகாதாரத்துறையின் கீழ் இயங்கும் மருந்து தரக்கட்டுப்பாட்டு நிர்ணய அமைப்பு பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

அதில், சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட கருவிகள் தவறான முடிவுகளை காட்டுவதாக வந்த புகாரின் அடிப்படையில் ஏப்ரல் 29 ம் தேதி விற்பனை உரிமம் ரத்து செய்யப்பட்டு, பரிசோதனை கருவிகளை திரும்ப அனுப்ப உத்தரவிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு சரியான நடவடிக்கைகளை எடுத்து வருவதால், இந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கு, நீதிபதிகள் சுப்பையா மற்றும் கிருஷ்ணன் ராமசாமி அடங்கிய அமர்வில் வரும் 18ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments