இந்தியா - சீனா இடையே 1962ஆம் ஆண்டு போல போர் மூளும் அபாயம்

0 7067

இந்தியா - சீனா இடையே 1962ஆம் ஆண்டு போல மீண்டும் போர் மூளும் அபாயம் இருப்பதாக பாதுகாப்பு நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

காலன் பள்ளத்தாக்கில் இருநாட்டு வீரர்களுக்கும் இடையே திடீரென கைகலப்பு நேரிட்டு, கற்கள் வீச்சு போன்ற சம்பவத்தால் இந்திய தரப்பில் ஒரு அதிகாரி உள்ளிட்ட 3 வீரர்களின் உயிரிழப்பு நிகழ்ந்துள்ளது.

இதேபோல சீன தரப்பிலும் உயிரிழப்பு நேரிட்டிருப்பதாக அந்நாட்டு அரசு ஊடகம் குறிப்பிட்டுள்ளது. இந்நிலையில், இந்த விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு மத்திய அரசு ராஜ்ஜீய ரீதியிலான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும், இல்லையெனில் சிறிய சம்பவங்களும் பிரச்னையாக உருவெடுத்து மிகப்பெரிய போரில் ஈடுபட வேண்டியிருக்கும் எனவும் பாதுகாப்பு நிபுணர்கள் தில்லான், டி.பி. சீனிவாசன் போன்றோர் எச்சரித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments