குஜராத் வளர்ச்சி மாதிரி வெளிப்பட்டு விட்டது: ராகுல் காந்தி விமர்சனம்

0 2649

கொரோனா உயிரிழப்பு விகிதத்தை சுட்டிக்காட்டி, குஜராத் வளர்ச்சி மாதிரி வெளிப்பட்டு விட்டதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

ட்விட்டர் பக்கத்தில் பிபிசி புள்ளி விவரத்தை பகிர்ந்து ராகுல் வெளியிட்ட பதிவில், உயிரிழப்பு விகிதம் குஜராத்தில் 6 புள்ளி 25 சதவீதமாகவும், மகாராஷ்டிராவில் 3 புள்ளி 73 சதவீதமாகவும்,ராஜஸ்தானில் 2 புள்ளி 32 சதவீதமாகவும், பஞ்சாபில் 2 புள்ளி 17 சதவீதமாகவும், புதுச்சேரியில் 1 புள்ளி 98 சதவீதமாகவும், ஜார்கண்டில் பூஜ்யம் புள்ளி 5 சதவீதமாகவும், சத்தீஸ்கரில் பூஜ்யம் புள்ளி 35 சதவீதமாகவும் இருப்பதாக கூறியுள்ளார்.

தேச உயிரிழப்பு விகிதத்தை விட குஜராத்தில் 2 மடங்கு அதிகமாக இருப்பதாகவும் அந்தப் பதிவில் ராகுல் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments