முதலில் வெளியாகும் கொரோனா தடுப்பூசிகளால் என்ன பயன் கிடைக்கும்?

0 3438

முதற்கட்ட கொரோனோ தடுப்பூசிகள் பெரிய அளவிலான பலன்களை அளிக்கும் என கருதவில்லை என தடுப்பூசி ஆய்வு ஒன்றில் ஈடுபட்டுள்ள லண்டன் இம்பீரியல் கல்லூரி பேராசியர் ராபின் ஷாட்டோக் தெரிவித்துள்ளார்.

முதலில் வெளியாகும் தடுப்பூசிகள் கொரோனா அறிகுறிகளை குறைக்குமா அல்லது தீவிர நோயில் இருந்து பாதுகாப்பு அளிக்குமா என்பதை கூற இயலாது என்ற அவர், தீவிர நோயில் இருந்து பாதுகாப்பு அளிக்கும் தடுப்பூசியால் மட்டுமே எதிர்பார்க்கும் பலன் கிடைக்கும் என கூறி உள்ளார்.

தடுப்பூசிகள் நோயில் இருந்து நம்மை பாதுகாத்தால் போதுமானது, தொற்றை ஏற்படுத்துவதில் இருந்து அவை நம்மை பாதுகாக்க வேண்டிய தேவை இல்லை என கலிபோர்னியாவின் Scripps Research -ன் நோய் தடுப்பு நிபுணர் டென்னிஸ் பர்ட்டன் கருத்து தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments