தரைவழி பயணத்துக்கு கெடுபிடி அதிகமிருப்பதால் விமானங்களில் பயணம் செய்வோர் எண்ணிக்கை அதிகரிப்பு

0 1400

தரைவழி பயணத்துக்கு கெடுபிடி அதிகமிருப்பதால், சென்னையில் இருந்து விமானங்கள் மூலம் சொந்த ஊர்களுக்கு 10 நாட்களில் 35,000 பேர் சென்றுள்ளனர். சென்னையில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்தோறும், தமிழகத்தின் பல பகுதிகளை சேர்ந்தோரும் வேலைக்காக தங்கியுள்ளனர்.

தற்போது கொரோனா பரவல் அதிகமிருப்பதால் அச்சமடைந்து சொந்த ஊர்களுக்கு பலரும் திரும்பி வருகின்றனர். தரைவழி பயணத்துக்கு இ-பாஸ் கோரி விண்ணப்பித்தால் அதிக கெடுபிடி கடைபிடிக்கப்படுவதாகவும், அதே வேளையில் விமான பயணம் செய்வோருக்கு அத்தகைய கெடுபிடி கடைபிடிப்பதில்லை எனவும் கூறப்படுகிறது.

இதனால் கடந்த 10 நாள்களாக சராசரியாக நாளுக்கு 3,500 பேர் சொந்த மாநிலங்களுக்கும், தமிழகத்தின் பிற மாவட்டங்களுக்கும் விமானங்களில் சென்றிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இக்காலத்தில் சென்னைக்கு 10 நாள்களில் 1,800 பேர் மட்டுமே வந்துள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments