எல்லை மோதல் குறித்து சீனா விளக்கம்..!

0 6849

லடாக் எல்லையில் ஏற்கனவே ஒப்புக்கொண்டபடி இந்தியா அங்கு தனது படைகளை கட்டுப்படுத்த வேண்டும் எனவும் எல்லையை கடந்து வந்து ஒருதலைப்பட்சமான நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது எனவும் சீனா கேட்டுக் கொண்டுள்ளது.

லடாக் எல்லையில் உள்ள கால்வான் பள்ளத்தாக்கில் இருதரப்பு வீரர்களுக்கும் இடையே நடந்த மோதல் குறித்து பெய்ஜிங்கில், சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் சுவோ லிஜியான் (Zhao Lijian) செய்தியாளர் சந்திப்பில் பேசினார்.

அப்போது இந்திய படைகள் எல்லையை கடந்து, போரை தூண்டும் வகையில் சீன துருப்புக்களை தாக்கியதாக தெரிவித்தார். சீன துருப்புகள் அதற்கு பதிலடி கொடுத்தனர் என்ற அவர், சீன தரப்பில் ஏற்பட்ட உயிரிழப்புகளை குறித்து எதுவும் பேசவில்லை. சம்பவம் குறித்து இந்தியாவிடம் சீனாவின் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

இந்திய துருப்புக்கள் எல்லையை கடந்ததால், பிரச்சனை சிக்கலாகி விட்டதாக அவர் தெரிவித்தார். எல்லையில் உள்ள படையினரை கட்டுப்படுத்துவதுடன் அவர்கள் ஒருதலைப்பட்சமான நடவடிக்கைகளில் ஈடுபடாமல் பார்த்துக் கொள்ளுமாறு இந்தியாவிடம் கேட்டுக் கொண்டுள்ளதாக அவர் கூறினார்.

எல்லைப் பிரச்சனையை இருதரப்பு பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கவும், அதன் மூலம் பதற்றம் குறைந்து அமைதி நிலவ இருநாடுகளும் ஒப்புக் கொண்டுள்ளதாகவும் சுவோ லிஜியான் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments