லடாக் பதற்றத்தை தொடர்ந்து முப்படைகளின் தலைமை தளபதியுடன் அமைச்சர் ராஜ்நாத் சிங் அவசர ஆலோசனை

0 2879

சீன ராணுவத்தின் தாக்குதலில் இந்திய வீரர்கள் 3 பேர் பலியானதை தொடர்ந்து பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங் முப்படைகளின் தலைமை தளபதி மற்றும் முப்படை தளபதிகளுடன் ஆலோசனை நடத்தினார். 

லடாக் எல்லையில் இந்தியா - சீனா ராணுவத்திற்கு இடையிலான மோதலால் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து டெல்லியில் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தலைமையில் உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், ராணுவ தளபதி மனோஜ் முகுந்த் நரவானே, விமானப் படை தளபதி ராகேஷ் குமார் சிங் பதாரியா, கடற்படை தளபதி கரம்பிர் சிங் ஆகியோர் அந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

அப்போது லடாக் எல்லையில் தற்போது நிலவும் சூழல் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அடுத்தகட்டமாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.
அதனைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திரமோடியிடம், லடாக் மோதல் விவகாரம், தற்போதுள்ள சூழல் குறித்து ராஜ்நாத்சிங் எடுத்துரைத்தார்.

இந்த நிலையில் பதற்றத்தை தணிக்கும் வகையில் இருதரப்பு ராணுவ கமாண்டர்கள் மற்றும் ஜெனரல்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

இதனிடையே இந்திய ராணுவ தளபதி நரவானேயின் பதான்கோட் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. சீன அத்துமீறல் எதிரொலியாக பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ராணுவ வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments