19-ம் தேதி முதல் சின்னத்திரை படபிடிப்பு, போஸ்ட் புரொடெக்ஷன் பணிகள் நிறுத்தம்

0 2368

வருகிற 19-ம் தேதி முதல் சின்னத்திரை படபிடிப்பு மற்றும் சினிமாவுக்கான போஸ்ட் புரொடெக்ஷன் பணிகளை நிறுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளதாக பெஃப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி தெரிவித்துள்ளார்.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த, சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் வருகிற 19-ம் தேதி முதல் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்தது.

இந்த நிலையில், ஏற்கனவே சின்னத்திரை படப்பிடிப்பு மற்றும் சினிமா போஸ்ட் புரெடெக்ஷன் பணிகளுக்கு அளிக்கபட்ட விலக்கு தற்காலிகமாக திரும்ப பெறப்படுவதாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கூறியுள்ளதாக தென்னிந்திய திரைப்பட தொழிலளர்கள் சம்மேளன தலைவர் ஆர்.கே.செல்வமணி தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments