NTA விண்ணப்ப தேதி நீட்டிப்பு..!

0 936

பல்வேறு தேர்வுகளுக்கு, ஆன்லைனில் விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான கடைசி நாளை, என்டிஏ எனப்படும் தேசிய தேர்வு சோதனை முகமை, மேலும் நீட்டித்துள்ளது.

இக்னோ நடத்தும் பிஎச்டி, எம்பிஏ நுழைவுத் தேர்வுகள், இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கவுன்சிலின் நுழைவுத் தேர்வு, ஜவஹர்லால் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வுகள், யுசிஜி தேசிய தகுதித் தேர்வு, ஆயுஷ் முதுநிலை படிப்புக்கான நுழைவுத் தேர்வு உள்ளிட்டவற்றுக்கு விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான கடைசி நாள் ஜூன் 15 ல் இருந்து ஜூன் 30 ஆக நீட்டிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சர் ரமேஷ் பொக்ரியால்,  கொரோனாவால், நழைவுத் தேர்வுகளை தள்ளிவைக்குமாறு பலதரப்பில் இருந்தும் வந்த கோரிக்கைகளை ஏற்று இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments