மருத்துவ மேற்படிப்பில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு கோரும் வழக்கு-மத்திய அரசு பதில் அளிக்க உத்தரவு

0 779

தமிழ்நாட்டில் உள்ள மருத்துவ கல்லூரிகளில் அகில இந்திய ஒதுக்கீடுக்கு வழங்கப்பட்ட இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்த உத்தரவிடக்கோரிய வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து அதிமுக, திமுக, பாமக உள்ளிட்ட அரசியல் கட்சியினர் தொடர்ந்த மனு, விசாரணைக்கு வந்தது. அப்போது அதிமுக சார்பில் 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் வரை கலந்தாய்வு நடத்த கூடாது என்றும், திமுக சார்பில் மத்திய அரசு 50 சதவீத இட ஒதுக்கீடு முழுமையாக அமல்படுத்த உத்தரவிட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.

மத்திய அரசு தரப்பில், தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்கள் எதிர்மனுதாரர்களாக சேர்க்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டது. இதைகேட்ட உயர்நீதிமன்றம், அவர்களை எதிர்மனுதாரர்களாக சேர்க்க உத்தரவிட்டது. மேலும் மனு குறித்து 22 ஆம் தேதிக்குள் பதில் அளிக்கவும் மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments