நடப்பு நூற்றாண்டின் இறுதியில் இந்திய வெப்பநிலை 4.4 டிகிரி செல்சியஸ் வரை உயர வாய்ப்பு

0 666

நடப்பு நூற்றாண்டின் இறுதியில், நாட்டின் சராசரி வெப்பநிலை, 4.4 டிகிரி செல்ஷியஸ் வரை உயரும் என, மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்த்தன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

நாட்டின் காலநிலை மாற்றம் குறித்து, புனேவிலிருக்கும் இந்திய வானிலை ஆய்வு மையத்தின் கட்டுப்பாட்டில் உள்ள, ஆராய்ச்சி மையம் அறிக்கையொன்றை தயாரித்துள்ளது. அதில், நூற்றாண்டின் இறுதிக்குள், ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரையிலான கோடை காலத்தில், அனல் காற்று வீசும் அளவிற்கு வெப்பநிலை 3 முதல் 4 மடங்கு அதிகரிக்கும் என குறிப்பிடப்பட்டு உள்ளது.

மேலும், நூற்றாண்டின் இறுதிக்குள் வடஇந்திய பெருங்கடலில் நீர்மட்டம் 300 மில்லி மீட்டர் உயரும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments