உலக அளவில் கொரோனா பாதிப்பு 81 லட்சத்தை தாண்டியது

0 894

சர்வதேச அளவில் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 81 லட்சத்தை கடந்துள்ள நிலையில், நேற்று ஒரே நாளில் மட்டும் ஒரு லட்சத்து 24 ஆயிரம் பேருக்கு புதிதாக நோய்த்தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்புக்குள்ளாகி 3ஆயிரத்து 415 பேர் உயிரிழந்ததை அடுத்து, பெருந்தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கையும் 4 லட்சத்து 38 ஆயிரமாக உயர்ந்துள்ளது. இன்று காலை நிலவரப்படி, அமெரிக்காவில் புதிதாக 20 ஆயிரம் பேருக்கும், பிரேசிலில் 23 ஆயிரம் பேருக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. உயிரிழப்பை பொறுத்தவரை, அதிகபட்சமாக பிரேசிலில் 729 பேரும், அமெரிக்காவில் 425 பேரும்  பலியாகியுள்ளனர்.

கொரோனா பாதித்தவர்களில் சுமார் 54 ஆயிரம் பேர் கவலைக்கிடமாக உள்ள நிலையில், வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைவோரின் எண்ணிக்கையும் 42 லட்சத்தைத் தாண்டியுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments