' திடீரென்று ஆக்ஸிஜன் அளவு குறைந்தது ' - டெல்லி மாநில சுகாதாரத்துறை அமைச்சர் மருந்துவமனையில் அனுமதி

0 4560


டெல்லி மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தலைநகர் டெல்லியில் கொரோனா கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இங்கு, 41 , 182 பேர் கொரோனாவால் பாதிப்புக்குள்ளகியுள்ளர். 1327 பேர் பலியாகியுள்ளனர். 15,000க்கும் மேற்பட்டவர்கள் பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். சமீபத்தில் டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சளியும் காய்ச்சலும் ஏற்பட்டது. அவருக்கு நடந்த பரிசோதானையில் கொரோனா பாதிப்பில்லை, சாதாரண காய்ச்சல் என்பது தெரிய வந்தது.

இந்தநிலையில் , நேற்றிரவு டெல்லி மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயினுக்கு அதிகளவில் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. உடலில் ஆக்ஸிஜன் அளவும் திடீரென்று குறைந்துள்ளது. இதையடுத்து, ராஜீவ்காந்தி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு ஆக்ஸிஜன் செலுத்தப்பட்டு வருகிறது.

தன் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருப்பதாக தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். சத்யேந்திர ஜெயினுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இன்று ரிசல்ட் வரும் வெளிவரும்.

திங்கள் கிழமை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் கொரோனா தொடர்பான பல்வேறு கூட்டங்களை நடத்தியிருக்கிறார். பல்வேறு மருத்துவமனைகளுக்கும் சென்று ஆய்வு நடத்தியதாக சொல்லப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments