சுஷாந்தின் தற்கொலையை தாங்க இயலாமல் நெருங்கிய உறவினர் மரணம்

0 8661

மும்பையில் தற்கொலை செய்து கொண்ட பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் இறப்பை தாங்க முடியாமல் அவரது நெருங்கிய உறவினர் ஒருவர் காலமானதாக தகவல் வெளியாகி உள்ளது.

34 வயதான சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த ஞாயிறு அன்று காலை பாந்த்ராவில் உள்ள தமது பிளாட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் காணப்பட்டார். அவரது மரண செய்தியை அறிந்தது முதல், அவரது சொந்த ஊரான பீகார் மாநிலம் புர்னியாவில் உள்ள நெருங்கிய உறவினர் சுஷா தேவி என்பவர் உணவு எதையும் அருந்தாமல் துக்கத்தில் ஆழ்ந்து விட்டதாக கூறப்படுகிறது.

உடற்கூறு ஆய்வுக்குப் பின்னர் நேற்று மும்பை பவான் ஹான்ஸ் மயானத்தில் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் உடல் தகனம் செய்யப்பட்டது. அதே நேரம் புர்னியாவில் நெருங்கிய உறவினரான சுஷா தேவியும் காலமாகி விட்டதாக குடும்ப வட்டாரங்கள் தெரிவித்தன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments