தமிழகம், டெல்லியில் இருந்து கர்நாடகம் வருபவர்களுக்கு கட்டாய தனிமைப்படுத்தல்

0 3291

தமிழகம் மற்றும் டெல்லியில் இருந்து வருவோர் கட்டாயம் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என, கர்நாடக அரசு அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், நோய்த்தொற்று பரவலை தடுக்கும் நோக்கில் குறிப்பிட்ட 2 மாநிலங்களில் இருந்து வருபவர்கள், முதல் 3 நாட்கள் முகாம்களிலும் அடுத்த 11 நாட்கள் வீடுகளிலும் தனிமைப்படுத்தப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக மகாராஷ்ட்ராவில் இருந்து கர்நாடகாவிற்கு வருபவர்கள் மட்டுமே முகாம்களில் தனிமைப்பட்டு வந்தனர். இந்த மூன்று மாநிலங்களை தவிர பிற மாநிலங்களில் இருந்து வருபவர்கள் 14 நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள வலியுறுத்தப்படுகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments