பெட்ரோல் - டீசல் விலை தொடர்ந்து 10வது நாளாக உயர்வு

0 863

பெட்ரோல் - டீசல் விலையை தொடர்ந்து இன்று 10-வது நாளாக எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன.

சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 41 காசுகள் உயர்ந்து 80 ரூபாய் 37 காசுகளுக்கு விற்கப்படுகிறது. டீசல் விலை லிட்டருக்கு 48 காசுகள் உயர்ந்து 73 ரூபாய் 17 காசுகளுக்கு விற்பனையாகிறது.

கடந்த 10 நாட்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 4 ரூபாய் 83 காசுகளும் டீசல் விலை லிட்டருக்கு 4 ரூபாய் 95 காசுகளும் உயர்த்தப்பட்டுள்ளது. 2018 அக்டோபருக்கு பின் முதல்முறையாக பெட்ரோல் விலை 80 ரூபாயைக் கடந்துள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 40 டாலர் என்ற அளவிலேயே இருந்து வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments