முழு ஊரடங்கு அமலாவதற்கு போதிய கால அவகாசம் உள்ளது : ராதாகிருஷ்ணன்

0 4467

முழு ஊரடங்கு அமலாவதற்கு போதிய நாட்கள் அவகாசம்  உள்ளதால் அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்காக பொதுமக்கள்  பதற்றமடைய வேண்டாம் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கேட்டுக்கொண்டுள்ளார்.

அண்ணா நகர், தேனாம்பேட்டை,கோடம்பாக்கம் மண்டலங்களில் கொரோனோ தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆயவுக் கூட்டம் எம்.ஆர்.சி நகரில் நடைபெற்றது.

அமைச்சர் காமராஜ்,சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்,சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் ஆகியோர் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

பின்னர் பேட்டியளித்த அமைச்சர் காமராஜ், சென்னையில் இறப்பு சதவீதத்தை குறைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு  வருவதாகவும்,பொதுமக்களுக்கு ஆயிரம் ரூபாய் உதவித்தொகை விரைந்து வழங்கப்படும் என்றும் கூறினார்.

தொடர்ந்து பேசிய ராதாகிருஷ்ணன்,பொதுஇடங்களில் முகக்கவசம் அணியாதவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments