தற்கொலை செய்து கொண்ட நடிகர் சுஷாந்த் சிங்கின் உடல் தகனம்

0 3986

தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங்கின் உடல், மும்பையில் இறுதிச் சடங்குகளுக்கு பின்னர் தகனம் செய்யப்பட்டது.

தோனி பட நாயகன் சுஷாந்த் சிங் ராஜ்புட் பாந்த்ராவிலுள்ள வீட்டில் ஞாயிறன்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கூப்பர் மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வு முடிந்த நிலையில், மும்பை வைல் பார்லே ((Vile Parle)) பகுதியிலுள்ள பவான் ஹன்ஸ் ((Pawan Hans)) இடுகாட்டில் அவரது உடல் இன்று மாலை தகனம் செய்யப்பட்டது.

முன்னதாக பீகார் மாநிலம் பாட்னாவிலிருந்து சுஷாந்தின் தந்தை உள்ளிட்ட குடும்பத்தினர் இன்று காலையிலேயே விமானம் மூலம் மும்பை வந்தடைந்தனர். அவரது தந்தை இறுதி சடங்குகளை செய்த நிலையில், சுஷாந்தின் உடல் தகனம் செய்யப்பட்டது.

பாஜக எம்.எல்.ஏ நீரஜ்குமார் சிங் பப்லூ, திரைப்பிரபலங்கள் ஷ்ரதா கபூர், க்ரீத்தி சனோன், முகேஷ் சாப்ரா ((Chhabra)) உள்ளிட்டோரும் இறுதிச் சடங்கில் கலந்துகொண்டனர். சுஷாந்த் சிங்கின் காதலி எனக் கூறப்படும் நடிகை ரியா சக்ரபர்த்தியும் இறுதிச் சடங்கில் கலந்துகொண்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments