கொரோனா சோதனையில் ஆன்டிஜென் கண்டுபிடிப்புக்கு அனுமதி

0 2384

கொரோனா சோதனையில் ஆன்டிஜென் கண்டுபிடிப்பு நடைமுறையை பயன்படுத்தலாம் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலான ஐசிஎம்ஆர் இன்று பரிந்துரைத்துள்ளது.

RT-PCR சோதனை செய்வதற்கு முன்னதாக இந்த ஆன்டிஜென் சோதனையை நடத்த வேண்டும். அதில் நெகடிவ் முடிவுகள் வந்தாலும், RT-PCR  சோதனைகள் மூலம் அதை உறுதி செய்வது கொள்வது அவசியமாகும்.

அதே நேரம் பாசிடிவ் என முடிவுகள் வந்தால்  அதை தொற்று என எடுத்துக் கொள்ள வேண்டும். அதை உறுதி செய்ய  RT-PCR சோதனைகளை நடத்த வேண்டிய தேவை இல்லை.

மனிதர்களின் மூக்கிற்கும் தொண்டைக்கும் இடைப்பட்ட பகுதியில்  கொரோனா வைரசுகள் இருப்பதை chromatographic immunoassay  என்னும் நடைமுறை வாயிலாக கண்டுபிடிப்பதே இந்த ஆன்டிஜென் சோதனையாகும்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments