நிலவில் நிலம் வாங்கிய முதல் இந்தியர் ; சனி கிரகத்தை ரசிக்க டெலஸ்கோப்!- சுசாந்த் சிங்கின் அறியப்படாத பக்கங்கள்

0 15151

நடிகர் சுஷாந்த் சிங்கின் தற்கொலையால் பாலிவுட் மௌனமாக அழுது கொண்டிருக்கிறது. அவரின், ரசிகர்களும் மிகுந்த வேதனையில் இருக்கின்றனர். மும்பையில் இன்று அவரின் உடல் அடக்கம் மாலை 4 மணிக்கு நடந்தது. கொரோனா பரவல் அச்சம் காரணமாக குறைந்த நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர்.

இந்த நிலையில் சுசாந்த் சிங்கின் சொத்து மதிப்பு குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. சுசாந்த் சிங் ஒரு படத்தில் நடிக்க ரூ. 5 முதல் 7 கோடி வரை பெற்றுள்ளார். அவரின் மொத்த சொத்து மதிப்பு ரூ. 59 கோடியாக உள்ளது. விலையுயர்ந்த BMW K 1300 R ரக பைக் மற்றும் ஏராளமான லக்ஸரி ரக கார்களையும் வைத்துள்ளார்.

இன்ஜீனியரிங் பட்டதாரியான சுசாந்த் சிங்குக்கு விண்வெளி, கிரகங்கள், கோள்கள், வான்வெளி பயணம் , நட்சத்திரங்கள் போன்றவற்றில் மிகுந்த ஆர்வம் உண்டு. வாயு கோளான சனி கிரகத்தை சுற்றியுள்ள மோதிர வளையங்களை காண்பதில் அவற்றை ரசிப்பதில் சுசாந்த் சிங்குக்கு அலாதி ஆர்வம் .

அதனால், Meade 14″ LX600, என்ற விலையுயர்ந்த நவீன டெலஸ்கோப்பையும் சொந்தமாக வாங்கி வைத்திருந்தார். இந்த டெலஸ்கோப் வழியாக அடிக்கடி சனிகிரகத்தில் மோதிர வளையங்களை பார்த்து ரசிப்பது சுசாந்த் சிங்கின் பொழுதுபோக்குகளில் ஒன்று.

நிலவில் நிலம் வாங்கிய முதல் இந்தியர் சுசாந்த் சிங்தான். நிலவின் பின்பக்கத்தில் மாரே மஸ்கோவின்ஸ் என்ற பகுதியில் சிறிய நிலத்தை சர்வதேச நிலவு நிலம் பதிவு மையத்திடமிருந்து அவர் வாங்கியுள்ளார்.

முன்னதாக, நடிகர் ஷாருக்கானுக்கு அவரின் ரசிகர் ஒருவர் நிலவில் நிலம் வாங்கி பரிசளித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments