பாகிஸ்தானில் ஜூலை இறுதியில் பாதிப்பு 12 லட்சத்தை கொரோனா பாதிப்பு எட்டும் என அமைச்சர் கணிப்பு

0 1496

பாகிஸ்தானில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஜூலை இறுதியில் 12 லட்சத்தை எட்டும் என அமைச்சர் ஆசாத் உமர் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானில் ஞாயிறன்று புதிதாக ஆறாயிரத்து 825 பேருக்கு கொரோனா உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை ஒரு லட்சத்து 44 ஆயிரத்து 478 ஆக அதிகரித்துள்ளது.

உயிரிழப்பு எண்ணிக்கை இரண்டாயிரத்து 729 ஆக உயர்ந்துள்ளது. தலைநகர் இஸ்லாமாபாத்தில் ஏழாயிரத்து 934 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பஞ்சாப் மாகாணத்தில் 52 ஆயிரத்து 601 பேரும், சிந்து மாகாணத்தில் 51 ஆயிரத்து 518 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments