ரயில் பெட்டி வார்டுகள் பயன்பாடு..!

0 1506

ரயில் பெட்டிகளை கொரோனா வார்டுகளாக மாற்றி பல மாதங்கள் ஆன நிலையில், சில மாநிலங்கள் அவற்றை பயன்படுத்த துவங்கி உள்ளன.

டெல்லியில் கொரோனா அதிகரித்து வரும் நிலையில் மருத்துவமனை படுக்கைகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக கூறப்படுகிறது. இதை அடுத்து  54 ரயில் பெட்டிகள் இப்போது கொரோனா சிகிச்சைக்கு டெல்லி அரசால் பயன்படுத்தப்படுகிறது.  உத்தர பிரதேச மாநிலத்தில் 70 ரயில் பெட்டிகளும், தெலங்கானாவில் 60 ரயில் பெட்டிகளும் மாநில அரசுகளால் பயன்படுத்தப்படுகின்றன.

4 மாநிலங்களில் இதுவரை 204 ரயில் பெட்டிகள் கொரோனா சிகிச்சைக்காக பயன்படுத்தப்படுவதாகவும், குறுகிய காலத்திற்குள் மேலும் 5000 பெட்டிகளை வழங்கத் தயார் என்றும் ரயில்வே அறிவித்துள்ளது. ஒவ்வொரு ரயில் பெட்டியையும் கொரோனா சிகிச்சை மையமாக மாற்ற 67000 ரூபாய் செலவிடப்படுகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments