சென்னையில் வரும் 19ந் தேதி முதல் முழு ஊரடங்கு

0 51140

வரும் 19ஆம் தேதி அதிகாலை முதல் 30ஆம் தேதி இரவு 12 மணி வரை, 12 நாட்களுக்கு சென்னையிலும், திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களின் சில பகுதிகளிலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், மருத்துவ நிபுணர்களுடனும், அமைச்சரவைக் கூட்டத்திலும் ஆலோசனை நடத்தப்பட்டதை சுட்டிக்காட்டியுள்ளார்.

பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், வரும் 19ஆம் தேதி அதிகாலை முதல் 30ஆம் தேதி இரவு 12 மணி வரை, 12 நாட்களுக்கு பெருநகர சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில், முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டத்தில், பெருநகர சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகள், திருவள்ளூர் நகராட்சி, கும்மிடிபூண்டி, பொன்னேரி மற்றும் மீஞ்சூர் பேரூராட்சிகளில் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படும்.

பூவிருந்தவல்லி, ஈக்காடு மற்றும் சோழவரம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படும்.

செங்கல்பட்டு மாவட்டத்தில், பெருநகர சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகள், செங்கல்பட்டு மற்றும் மறைமலைநகர் நகராட்சிகளிலும், முழு ஊரடங்கு உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.

நந்திவரம்- கூடுவாஞ்சேரி பேரூராட்சியிலும் மற்றும் காட்டாங்குளத்தூர் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படும்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பெருநகர சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் மட்டும் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments