இந்திய-நேபாள உறவை உடைக்க எவராலும் முடியாது - ராஜ்நாத் சிங்

0 1855

இந்தியாவுக்கும் நேபாளத்திற்கும் இடையே ஏதாவது தவறான புரிதல் இருந்தால் அதை சரி செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

இந்திய பகுதிகளை உள்ளடக்கி புதிய வரைபடம் வெளியிட முயற்சி, எல்லையில் இந்தியர்கள் மீது துப்பாக்கிச்சூடு என சர்ச்சைகளை உருவாக்கி வருகிறது நேபாளம்.

அதன் பின்னணியில் பாகிஸ்தானும், சீனாவும் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், பாஜக வின் தொண்டர்களுக்கு டிஜிட்டல் முறையில் உரையை நிகழ்த்துகையில் ராஜ்நாத் சிங் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கும் நேபாளத்திற்குப் இடையேயான உறவு சாதாரணமான ஒன்று அல்ல என்றும் உணவாலும் உணர்வாலும் அது பிணைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். உலகின் எந்த சக்தியாலும் இந்த உறவை உடைக்க இயலாது என்றார் அவர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments