OBC 50 சதவீத இட ஒதுக்கீடு வழக்கு நாளை விசாரணை

0 1517

மருத்துவப் படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50 விழுக்காடு இட ஒதுக்கீடு கோரிய வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வருகிறது.

தமிழக மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவப் படிப்பில் 15 விழுக்காடு இடங்களும், மருத்துவ மேற்படிப்பில் 50 விழுக்காடு இடங்களும் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்படுகிறது.

இந்த அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50 விழுக்காட்டை ஒதுக்கக் கோரி திமுக, அதிமுக, பாமக உள்ளிட்ட கட்சிகள் சார்பில் உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சுப்பையா, கிருஷ்ணன் ராமசாமி அமர்வு முன் நடைபெற்ற விசாரணையின் போது,  மருத்துவ மேற்படிப்புகளுக்கான இரண்டாம் கட்டக் கலந்தாய்வு நடைபெற்று வருவதால் இந்த வழக்கை விரைந்து விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என வழக்கறிஞர்கள் முறையிட்டனர். இந்த முறையீடுகளைக் கேட்ட நீதிபதிகள், நாளை முதல் வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாகத் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments