கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 11,502 பேருக்கு கொரோனா உறுதி

0 1836

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 11 ஆயிரத்து 502 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று ஒரே நாளில் நாடு முழுவதும் 325 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.

மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள விவரங்களின்படி, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3,32,424 ஆக உயர்ந்துள்ளது.

இதில், 51 சதவீதத்திற்கும் அதிகமானோர் குணமடைந்து, 47 சதவீதத்திற்கும் குறைவானவர்களே சிகிச்சையில் உள்ளனர். அந்த வகையில் 1,69,798 பேர் இதுவரை குணமடைந்துள்ளனர். 1,53,106 பேர் சிகிச்சையில் உள்ளனர். கொரோனாவுக்கு இதுவரை 9,520 பேர் உயிரிழந்துள்ளனர்.

நேற்று ஒரே நாளில் மேலும் 11,502 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 325 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். தொடர்ந்து மூன்றாவது நாளாக 11 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பு பட்டியலில் முதலிடத்தில் உள்ள மகாராஷ்டிராவில், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1 லட்சத்து 10 ஆயிரத்தை நெருங்கி வருகிறது. இரண்டாம் இடத்தில் உள்ள தமிழகத்தில் 44,661 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

மூன்றாமிடத்தில் உள்ள டெல்லியில் பாதிப்பு 41 ஆயிரத்தை ((41,182)) தாண்டியுள்ளது. நான்காம் இடத்தில் உள்ள குஜராத்தில் பாதிப்பு 23 ஆயிரத்தை ((23544)) தாண்டியுள்ளது.

உத்தரப்பிரதேசத்தில் பாதிப்பு 13 ஆயிரத்தையும் ((13615)), ராஜஸ்தானில் 12 ஆயிரத்தையும் ((12694)), மேற்குவங்கத்தில் 11 ஆயிரத்தையும் ((11087)), மத்தியப்பிரதேசத்தில் 10 ஆயிரத்தையும் ((10,802)) தாண்டியுள்ளது.

ஹரியானாவில் பாதிப்பு 7 ஆயிரத்தை ((7208)) தாண்டியுள்ளது. கர்நாடகாவில் பாதிப்பு 7 ஆயிரமாக உயர்ந்துள்ளது. பீகாரில் பாதிப்பு 6 ஆயிரத்து நானூறையும் ((6470)), ஆந்திரப் பிரதேசத்தில் பாதிப்பு 6 ஆயிரத்து நூறையும் தாண்டியுள்ளது. தெலுங்கானாவில் பாதிப்பு 5 ஆயிரத்தை ((4974)) நெருங்கியுள்ளது.

இதனிடையே, இந்தியாவில் இதுவரை 57,74,133 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக, மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,15,519 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments