பெட்ரோல், டீசல் விலையை ஜி.எஸ்.டி.,க்குள் கொண்டுவர காங்கிரஸ் மீண்டும் வலியுறுத்தல்

0 542

பெட்ரோல். டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் அவற்றை, ஜி.எஸ்.டி., வரம்புக்குள் கொண்டு வர வேண்டும் என காங்கிரஸ் மீண்டும் வலியுறுத்தி உள்ளது.

இதுதொடர்பாக அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 16 ஆண்டுகளில் இல்லாத அளவிற்க்கு கச்சா எண்ணெயின் விலை குறைந்து உள்ள நிலையில், விலை குறைப்பின் பயன் நுகர்வோர்களுக்கு கிடைக்கப் பெறாமல் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருவதாக காங்கிரஸ் குற்றம்சாட்டி உள்ளது. மேலும், பெட்ரோலியப் பொருட்களை ஜி.எஸ்.டி வரம்புக்குள் கொண்டு வரும் வரையில் கடந்த 2004ம் ஆண்டு மே மாதம் முதற்கொண்டு, தற்போது வரை அவற்றின் மீது மத்திய அரசால் 12 முறை உயர்த்தப்பட்டு உள்ள கலால் வரி உடனடியாக நீக்கப்பட வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments