சொகுசு விடுதியில் காங். மற்றும் சுயேட்சை எம்.எல்.ஏக்களுக்கு உபசரிப்பு

0 884

ராஜஸ்தான் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் அனைவரும் ஜெய்ப்பூரில் உள்ள ஒரு விடுதியில் இன்று 5வது நாளாக தங்கியுள்ளனர்.

காங்கிரசுக்கு ஆதரவளிக்கும் சில சுயேட்சை எம்.எல்.ஏக்களும் அங்கு தங்க வைக்கப்பட்டுள்ளனர். சொகுசு விடுதியில் ரிச்சர்ட் ஆட்டன்பரோ இயக்கிய காந்தி திரைப்படம் காண்பிக்கப்பட்டது.

மாநிலங்களவைத் தேர்தலையொட்டி பாஜக குதிரைபேரம் பேசுவதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.  காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் மனம் மாறுவதைத் தடுக்க கட்சித் தலைமை அவர்களை சொகுசு ஓட்டல்களில் தங்க வைத்துள்ளது. கட்சியின் மூத்த தலைவர்கள், அமைச்சர்கள் அவர்களை நன்கு உபசரித்து கவனித்துக் கொள்கின்றனர். நேற்று நான்காவது நாளாக ஜெய்ப்பூர் விடுதியில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் அடைந்து கிடந்தனர்.

சச்சின் பைலட்டுக்கு நெருக்கமானவரான அமைச்சர் ரமேஷ் மீனா திடீரென மாயமாகிவிட்டதாகவும் அவரை தொலைபேசியில் தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும் காங்கிரஸ் கட்சியினர் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments