மத்தியப் பிரதேச ஆளுநரின் உடல்நிலையில் முன்னேற்றம்

0 651

மத்தியப் பிரதேச ஆளுநர் லால்ஜி டாண்டனின் உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

85 வயதான அவர் சுவாசப் பிரச்சனை, சிறுநீரகக் கோளாறு உள்ளிட்ட காரணங்களுக்காக, கடந்த 11ம் தேதி லக்னோவில் உள்ள மேடந்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதையடுத்து, அவருக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் அவருக்கு நோய்த்தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில், தொடர்ந்து அவர் மருத்துவ கண்காணிப்பில் இருப்பதாகவும், அவசர சிகிச்சைப் பிரிவில் இருந்தாலும் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளதாக மருத்துவமனையின் இயக்குனர் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments