காவல்நிலையத்தில் மண்வெட்டியால் அடித்து இளைஞர் படுகொலை

0 1319

உத்தரப்பிரதேச மாநிலம் பிரதாப்கர் காவல்நிலையத்தில் இளைஞர் ஒருவர் மண்வெட்டியால் மற்றொரு நபரை அடித்து கொல்லும் வீடியோ வெளியாகி உள்ளது.

ராணிகஞ்ச் பகுதியை சேர்ந்த இந்தர்பால் என்பவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்ய முயற்சித்த போது போலீசாரால் கைது செய்யப்பட்டார். மனநலம் பாதிக்கப்பட்ட அந்த நபர் ராணிகஞ்ச் காவல்நிலையத்தில் அமர வைக்கப்பட்டிருந்தார்.

அப்போது அவர் எதிரே மிதாய்லால் மற்றும் அவருடைய சகோதரர் ஆகியோர் நிலத்தகராறு காரணமாக அமர வைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் திடீரென்று அங்கிருந்த மண்வெட்டியை எடுத்த இந்தர்பால் சரமாரியாக மிதாய்லாலை தாக்கினார். இதில் பலத்த காயம் அடைந்த மிதாய்லால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். மிதாய்லாலை மண்வெட்டியால் அடித்து கொல்லும் வீடியோ வைரலாகி வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments