9வது நாளாக பெட்ரோல்-டீசல் விலை உயர்வு

0 1862

சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து 9வது நாளாக உயர்ந்த வண்ணம் உள்ளது.

கடந்த 6ம் தேதி நிலவரப்படி பெட்ரோல் விலை சென்னையில் லிட்டர் 75 ரூபாய் 54 காசுகளாகவும், டீசல் விலை 68 ரூபாய் 22 காசுகளாகவும் இருந்தது. அதன்பிறகு ஒவ்வொரு நாளும் விலை உயர்த்தப்பட்டு வந்தது.

இன்று காலை நிலவரப்படி பெட்ரோல் விலை லிட்டருக்கு 43 காசுகள் உயர்த்தப்பட்டு 79 ரூபாய் 96 காசுகளாக உள்ளது. டீசல் விலை லிட்டருக்கு 51 காசுகள் உயர்த்தப்பட்டு 72ரூபாய் 69 காசுகளாக உள்ளது. கடந்த ஒன்பது நாட்களில் பெட்ரோல் விலை 4 ரூபாய் 42 காசுகளும், டீசல் விலை 4 ரூபாய் 47 காசுகளும் அதிகரித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments