குஜராத்தில் நிலநடுக்கம்-அச்சத்தில் வீட்டை விட்டு வெளியேறிய மக்கள்

0 2202

குஜராத் மாநிலத்தின் சில இடங்களில் நேற்று இரவு திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே ஓடி வந்தனர்.

அம்மாநிலத்தின் கட்ச் மாவட்டத்தில் உள்ள பச்சாவ் பகுதியை மையமாக கொண்டு உருவான இந்த நிலநடுக்கம் ராஜ்கோட், பூஜ், அகமதாபாத் மற்றும் பதான் உள்ளிட்ட பகுதிகளில் உணரப்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 5.8 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் பாதிப்பு ஏதுவும் ஏற்படவில்லை எனினும், அச்சத்தில் மக்கள் அலறியடித்துக் கொண்டு வீடுகளை விட்டு வெளியே ஓடி வந்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments