மும்பையில் மூன்று தடங்களில் மின்சார ரயில்கள் இயக்கம்

0 1307

மும்பையில் 80 நாட்களுக்குப் பிறகு மீண்டும் இன்று முதல் மின்சார ரயில்கள் ஓடத் தொடங்கியுள்ளன.

காலை 5.30 மணி முதல் இரவு 11.30 வரை 15 நிமிட இடைவெளியில் மூன்று வழித்தடங்களில் இந்த ரயில்கள் இயக்கப்படுகின்றன. அத்தியாவசிய சேவைகளுக்காக செல்லும் பணியாளர்கள் மட்டுமே பயணிக்க முடியும். மாநில அரசிடமிருந்து தொழிலாளர்கள் அடையாள அட்டையை காட்டி அனுமதிச் சீட்டு பெற்று இந்த ரயில்களில் பயணிக்கலாம்.

மெயின் லைனான சத்ரபதி சிவாஜி ரயில்நிலையத்தில் இருந்து கல்யாண், கர்ஜத் வரை செல்லும் தடத்தில் 200 ரயில்கள் இயக்கப்பட உள்ளன

மேற்கு வழித்தடமான வெஸ்டர்ன் ரயில்வே தடத்தில் சர்ச்கேட் நிலையத்தில் இருந்து விரார் வரை செல்லும் 130 ரயில்களும், துறைமுக லைன் தடத்தில் சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்தில் இருந்து பான்வெல் உள்ளிட்ட நவி மும்பைப் பகுதிகளுக்கு 70 ரயில்களும் இயக்கப்பட உள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments